/ வாழ்க்கை வரலாறு / அப்துல் கலாமின் ஆளுமைச் சிந்தனைகள்
அப்துல் கலாமின் ஆளுமைச் சிந்தனைகள்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிந்தனையில் உதித்த கருத்துகளைக் கூறும் நுால். பூமியில் ஒவ்வொரு ஜீவனையும் ஒரு செயலை முடிக்க இறைவன் படைத்துள்ளான்; ஒரு தடவை மனம் புதிய சிந்தனையில் லயித்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்கக் கூடாது. வெற்றி பெற பதற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த வழி. மனமும், ஆளுமைத் திறனும் அபார வலிமையுடன் படைக்கப்பட்டுள்ளது. உண்மையை வெளிப்படையாகப் பேச வேண்டும். உறுதியான விளைவுகளை தேடுவது முடிவில்லா பயணம். இன்னல்கள், பிரச்னைகள் வளர்ச்சியடைய கிடைக்கும் வாய்ப்பு என்கிறது. இறுதியில் கலாம் பெற்ற விருதுகளும், சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. சிந்தனையை துாண்டும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து