/ வாழ்க்கை வரலாறு / அப்துல் கலாமின் அறிவார்ந்த சிந்தனைகள்!

₹ 125

விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் சிந்தனைகள், வாழ்வில் நடந்த சில சம்பவங்களை விவரிக்கும் நுால். அப்துல் கலாம் உதவியாளர், தன் மகனை அன்று பொருட்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக சொன்னார். ஆனால் சூழ்நிலையால் இயலவில்லை. இதை அறிந்த அப்துல் கலாம், உதவியாளர் மகனை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றது வெறும் சம்பவம் அல்ல. அந்த சிறுவன் மனதில் உதவும் பண்பை கற்றுக் கொடுத்த பாடம்.சொந்த விமானத்தை நாமே உருவாக்குவோம் என்று அவர் படிக்கும் காலத்தில் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. சிந்தனைகளை படித்து மேற்கோள் காட்ட ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நுால்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை