/ வரலாறு / ஆச்சரியமூட்டும் ஜப்பான்

₹ 120

ஜப்பானிய பொருளாதாரம், பண்பாடு, கல்வி, வாழ்க்கை முறை பற்றி சொல்லும் நுால். அமெரிக்காவில் பயணம் செய்த அனுபவமும் பகிரப்பட்டுள்ளது. ஜப்பானில் இளைஞர் எண்ணிக்கை குறைந்து வருகிறது; முதியவர் எண்ணிக்கை கூடுகிறது. காரணம், இளம் பெண்களும், ஆண்களும் குழந்தை பெற விரும்புவதில்லை; நட்பு, காதல், காமத்துடன் வாழ்வதே வசதியாக உள்ளது என்ற நிலைக்கு வந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. குழந்தை பெற்று வளர்ப்பதில் தயக்கம் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது. சகுர ஜிம்மா தீவு பகுதியில், 300 அடி உயரத்தில் எரிமலை தணல் கக்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. இதில் பரவும் சாம்பல் சத்தில் விளையும் பழம், காய்கறிகள் சுவையுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பானை நேரில் பார்த்த உணர்வை தரும் நுால்.– சீத்தலைச் சாத்தன்