/ வாழ்க்கை வரலாறு / ஆதித்திய கரிகாலனைப் பற்றிய ஆச்சரியமான வரலாறு
ஆதித்திய கரிகாலனைப் பற்றிய ஆச்சரியமான வரலாறு
ஆதித்திய கரிகாலனின் மரணப்பின்னணியில் எழுதப்பட்ட நாவல் நுால். அவன் வாழ்க்கையை ஒரு ஒழுங்குக்கு உட்படுத்திக் காட்டியுள்ளது. மலையமான் மாளிகையில் அவன் பிறப்பைக் குறிப்பிட்டு, சம்புவராயர் மாளிகையில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டில் கிடைத்த உதவிகள், குந்தவை, வந்தியத்தேவன், நந்தினி என கதாப்பாத்திரங்களுடன் பின்னப்பட்டுள்ளது.ஆதித்திய கரிகாலன் கொலை முயற்சியை விவரிக்கிறது. இதற்காக, பிற்கால சோழர் வரலாறு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. பாணர் குலம், வாணர் குலமாக மாறியதை சொல்கிறது. பல்லவ மன்னன் பார்த்திபேந்திரன் பற்றியும் தெளிவாக உள்ளது. சரித்திர புதிருக்கு விடை தருவதாக அமைந்துள்ள நுால்.– முகிலை ராசபாண்டியன்