/ இசை, இயல், நாடகம் / அடிமைத்தனத்தின் வீழ்ச்சி!
அடிமைத்தனத்தின் வீழ்ச்சி!
நீண்ட கவிதை வடிவில் அமைந்துள்ள நாடக நுால். ஒரு நாட்டு மன்னனை, எதிரி நாட்டு இளவரசியான ஊர்வசி மயக்கி கைப்பாவை ஆக்குகிறாள். தொடர்ந்து மகாராணியை கொல்கிறாள். மன்னனின் வாரிசு என தவறாக எண்ணி, ஒரு குழந்தையை கொன்று விடுகிறாள். இளவரசியிடம் மன்னன் போதையில் கிடப்பது, நடப்பு அரசியலை சித்தரிப்பது போல் உள்ளது. பெரிய நாடகம் கவிதை வடிவில் சுவையுடன் படைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் வழியாக, ‘புழுதி புயல் மூலம் அழி பகுதி’ என நாட்டை அடையாளம் காட்டும் போது, இயற்கை சீற்றத்தால் சில பகுதிகள் படும்பாடு காட்சியாக தெரிகிறது. சர்வாதிகாரம் என்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், கவிதை வடிவில் அதிகம் கவர்கிறது. மனதை கவரும் நெடுங்கவிதை நுால். – சீத்தலைச் சாத்தன்




