/ கதைகள் / அகைன்ஸ்ட் தி ஸேடோஸ் 2 (ஆங்கிலம்)

₹ 130

சிறுமியின் எண்ணத்தில் உதித்த ஆங்கில நாவலின் இரண்டாம் பகுதி நுால். திரைப்படம் போல் காட்சிகளின் தொடர்ச்சியாய் உள்ளது. பள்ளியில் படித்த காலத்தில் ஆறு பேருக்குள் ஏற்பட்ட நட்பை மையமாக கொண்டது கதை. அது கல்லுாரி காலத்தில் நினைவாக தொடர்கிறது. பள்ளி படிப்புக்கு பின், ஒவ்வொருவரின் வாழ்வை பற்றி பதிவு செய்கிறது. தொய்வின்றி நட்பை பேணுவதை நெகிழ்வுடன் முன்வைக்கிறது. நாட்கள் வாரியாக கதையை பாகமாக்கி காட்டுகிறது. நட்பின் மேன்மையை பறை சாற்றுகிறது. மனதின் பிணைப்பு வலுவாக உள்ளதை விவரிக்கிறது. வினோதமான நிகழ்வுகள் ஒவ்வொருவர் வாழ்விலும் குறுக்கிடுவதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்யப் பட்டுள்ளது. சுவாரசியம் குன்றாத நாவல் நுால். – சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி