/ கதைகள் / எகென்ஸ்ட் தி ஷேடோஸ் (ஆங்கிலம்)

₹ 200

விறுவிறுப்பான ஆங்கில நாவல் நுால். கதாநாயகி கனடா நாட்டைச் சேர்ந்த 16 வயதே நிரம்பிய பள்ளி மாணவி. அவள் பாடத்திலும் இசையிலும் நாட்டமுடையவளாக விளங்கினாள். ஒரு நாள் கோவில் பாட்டரங் கிற்கு செல்கிறாள். இருள் சூழ்ந்த அம்மண்டபத்தை சுற்றி அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறாள். அச்ச மூட்டி அது அவளை துரத்துகிறது; பின்தொடர்கிறது. அது பிரம்மையா... உண்மையிலேயே நிகழ்கிறதா என்பதற்கு விடை தேடுகிறாள். உண்மையை கண்டறியும் பயணத்தில் நட்புகளை உருவாக்கி கொள்கிறாள். உறவின் உறுதுணையும் நட்பின் வலிமையும் உதவியாக இருக்கிறது. அடுத்தது என்ன என அறிய ஆவலை துாண்டுகிறது. குறிப்பாக சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள நாவல் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை