/ கட்டுரைகள் / அகம்
அகம்
சிந்திக்கத் துவங்கிய வயதில், மனதில் பதிந்த நினைவு சுவடுகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். தமிழகத்தில் பல துறைகளில் பிரகாசிக்கும் பெண்களின் அனுபவம் பதிவாகியுள்ளது.இளம் வயதில் பெண்கள் காணும் உலகம் தனித்துவமானது. அந்த சித்திரம் ஆர்வமூட்டும் வகையில் பதிவாகியுள்ளது. வீட்டில், பொதுவெளியில், பள்ளியில் பெற்ற அனுபவம், படித்த புத்தகம், எதிர்கொண்ட சிக்கல் என பல சுவைகளும் உள்ளன. நம்பிக்கை ஊட்டி வாழ்வின் உயர்வுக்கு உதவுவதை அறியத்தருகிறது.எழுத்தாளர்கள், சமூகப் பணி செய்வோர், மெக்கானிக், விஞ்ஞானியாக பணியாற்றுவோர் என பல தரப்பினரும் சிந்தனையின் துவக்கப்புள்ளியை வெளிப்படுத்தியுள்ளனர். நினைவுகளை பதிவு செய்துள்ளனர். அனுபவங்களின் தொகுப்பாக நம்பிக்கையூட்டி முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் நுால்.– ஒளி