/ தமிழ்மொழி / அகம் புறம் அறம்
அகம் புறம் அறம்
தமிழர்களின் கண்களாக விளங்கும் அகம், புறம் குறித்து விரிவாக விளக்கியுள்ள நுால். தமிழர் வாழ்வில் காதலும், வீரமும் பிரிக்க முடியாதவையாக உள்ளன. இவற்றில் அகம் குறித்த தகவல்களை விரிவாக பகிர்ந்துள்ளது. தொல்காப்பியம் கூறும் இலக்கணம், சங்க இலக்கியங்களில் உள்ள தகவல்கள் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கடவுளை வழிபடும் முறையிலும் இந்த அம்சங்கள் உள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருமூலரையும் சேக்கிழாரையும் ஒப்பிட்டு கூறியுள்ள தகவல்கள் அருமை. பெருந்தெய்வம், சிறுசெய்வம், நடுகல் வழிபாடு குறித்தும் ஆராய்ந்துள்ளது.திருவொற்றியூரில் வடிவுடையம்மன் பற்றிய செய்திகளும் உள்ளன. பாரதியார் குறித்த விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன. பல தகவல்களை உள்ளடக்கிய நுால்.– முகில்குமரன்