/ கவிதைகள் / அகம் புறம் அவள்

₹ 200

பல்வேறு பெண் எழுத்தாளர்களின் பெண் சார்ந்த கவிதைகளை மேற்கோள் காட்டி, தன் கருத்தை வழிநெடுக சொல்லியிருக்கிறார் ஆசிரியர் ஆதிரா முல்லை. நல்ல ஆண்மையுள்ள சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு பெண்மையில் தான் இருக்கிறது; ‘ஆசை வார்த்தைகளுக்கு ‘நோ’ சொல்வதன் அவசியம் என்ன’ போன்ற விஷயங்களை திகட்டாமல் பரிமாறி இருக்கிறார் ஆசிரியர். ஒரு ஆணின் தோள் மீது ஏறி பயணம் செய்யாமல், தாங்கள் தோள் கொடுக்கும் அறிவு ஆசானாக பெண்கள் மாற வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது. பெண்களின் உளவியலை பெரிதாக அலட்டாமல் திறனாய்வு செய்துள்ளார் ஆசிரியர். தத்துவத்தை கவித்துவமாக சொல்ல முடியும் என்பதற்கு இந்நுால் ஓர் எடுத்துக்காட்டு. பெண்களின் உணர்வுகளை உன்னதமாக பேசுவதோடு, உளவியல் ரீதியாகவும் அணுகியவிதத்தில் சாதித்துள்ளார் ஆசிரியர் ஆதிரா முல்லை. – ரெங்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை