/ கதைகள் / அல்தாயின் அற்புதம்
அல்தாயின் அற்புதம்
மாணவி எழுதி பாராட்டுகள் பெற்ற மாயஜால நாவல். எஸ்மெஹ்ரா என்ற பெண்ணுக்கும், ராஜ வாரிசுகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. நாட்டை விட்டு வெளியேற்றியோரை பழி வாங்க, மகனை அரசனாக்குகிறாள் எஸ்மெஹ்ரா. மாய சக்தியால் செய்த சூழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து விறுவிறுப்பாக சொல்கிறது. எஸ்மெஹ்ராவின் பழி வாங்கல் நிறைவேறியதா, மகள், மகன்கள் பிரிந்தது எதனால்? மக்கள் மகிழ்ச்சி அடைந்தனரா என்பதற்கு விடை காண்கிறது. அரண்மனை வாழ்க்கை, மலை, பனி பிரதேசம், அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டுகிறது. சிறுவர்களுக்கு உரிய கற்பனை ஓவியத்துடன் விரிகிறது. பழி வாங்கல் இல்லாத குணம், அன்பு, அக்கறை மேலோங்க வேண்டும் என எடுத்துரைக்கும் நாவல்.– டி.எஸ்.ராயன்




