Advertisement

Spoken English Made Easy

₹ 900

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்கம்: 150 + 8 "டிவிடிக்கள் ஆங்கில மொழியைச் சரியான உச்சரிப்புடன் பேசுவதும், இலக்கண பிழை இன்றி பேசி, எழுதுவதும் இன்றைய காலத்தில் வாழவும், வேலை வாய்ப்பினை பெறவும் அத்தியாவசியத் தேவை. இந்த நோக்கத்துடன் சென்னை, வேல்ஸ் அகடமி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், Spoken English Made Easy என்னும் தலைப்பில் எட்டு "டிவிடிக்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. இவற்றுடன் நூல் ஒன்றும் தரப்படுகிறது.பேச்சு பயிற்சி மற்றும் இலக்கணப் பயிற்சி, பிழையின்றி சரியான முறையில் ஆங்கிலம் பயன்படுத்தும் வழிகள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஆங்கில மொழி பயிற்சி தரப்பட்டுள்ளது. எட்டு "டிவிடிக்களும் பல்வேறு தலைப்பில், ஒரு வகுப்பில் எப்படி சொல்லிக் கொடுக்கப்படுமோ, அதே போலத் தயாரிக்கப்பட்டுள்ளன.பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வில் கேட்கப்படும் பேச்சு பயிற்சி மற்றும் இலக்கண பயிற்சிக்கு இந்த நூலும், "டிவிடிக்களும் பெரிதும் உதவியாய் இருக்கும். வீட்டில் இருந்தபடியே, நாம் விரும்பும் நேரத்தில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள திட்டமிடுபவர்களுக்கும் இது உதவும்.நூலாசிரியை ஹரி ஷ்யாமளா தர்மர், தமிழ்நாட்டிலும் மற்றும் பல வளைகுடா நாடுகளிலும் ஆங்கில மொழி கற்றுக்கொடுக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டவர் என்பதால், எளிய வகையில் வடிவமைத்திருக்கிறார்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்