/ வாழ்க்கை வரலாறு / அமரர் கல்கி
அமரர் கல்கி
பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் நுால்.இளமையில் நடத்திய கதாகாலட்சேபம், காந்திஜி வேண்டுகோள்படி ஆங்கில மொழிக் கல்வியை துறந்தது, காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு, சிறை வாழ்க்கை என தகவல்களை கூறுகிறது. எழுத்தாளராக மாறிய நிகழ்வு, 5 ரூபாய் கட்டணம் செலுத்தி கவிஞர் தாகூரை சந்தித்த நிகழ்வு, கல்கி இதழைத் துவங்கியது பற்றிய செய்திகள் எல்லாம் தரப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வனாக வாழ்ந்து வரும் கல்கி வாழ்வை அறிய உதவும் நுால்.– அழகன்