/ பொது / அம்பேத்கர் பார்வையில் சாதி ஒழிப்பு

₹ 250

ஜாதியை ஒழிக்க உப ஜாதிகளை இணைப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல; அதை வலுப்படுத்தவே துணை போகும். ஜாதி ஒழிப்புக்கு சமபந்தி விருந்து போதுமான செயலல்ல; ஜாதி மறுப்பு திருமணமே உண்மை வழி என உரைக்கும் நுால்.ஜாதி வேலியாக இருந்தால் எளிதாக தகர்த்து விடலாம். ஆனால், அது ஒரு கண்ணோட்டம்; ஒரு மனநிலை. இதை கடைப்பிடிப்பதற்கு, மனித தன்மை அற்றவர்களாக இருப்பதோ, பிடிவாத குணமும் வக்கிர புத்தியும் கொண்டவர்களாக இருப்பதோ காரணம் என்று கூறிவிட முடியாது. ஆழமான மத பற்றுடையவர்களாக இருப்பதே காரணம். ஜாதி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கோட்பாடு நுால்.– புலவர் சு.மதியழகன்