/ கதைகள் / அம்புலி – சிறுகதை தொகுப்பு

₹ 180

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை விவரிக்கும் சிறுகதை தொகுப்பு நுால். நாக்கு என துவங்கி, மிருகம் என முடியும் 16 கதைகள் உள்ளன. நிலையான வாழ்வாதாரம் இல்லாத பலதரப்பட்ட மக்களின் ஆதங்கம், கதைகள் ஊடாக செல்கிறது.மறந்துபோன கிராமிய கலைகள், கலைஞர்களின் வாழ்க்கை சூழல், விவசாயத்தின் முக்கியத்துவம், மனிதர்களின் குண நலன்களை விவரிக்கிறது. பசி, உணவு, வலி என்ன என்பதை உணர்த்தும்.கதையில் உள்ள வட்டார மொழிகள், எளிதில் புரியும் வகையில் உரைக்க வைத்துள்ளார் ஆசிரியர். கதைகளில் வரும் வாழ்வியல் முறைகளை சொன்ன விதம் புதுமை.உணர்வுகளை புரிந்து கொள்ள நினைப்பவர்கள், சிறுகதை எழுத துடிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை