/ கவிதைகள் / அம்மா அழைப்பு
அம்மா அழைப்பு
அன்னை வேளாங்கண்ணி மாதா மீதான பாடல் மற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். எழுச்சி கோலங்களாக, வண்ண மலர்களாக அம்மா அழைப்பு என விரித்து காட்டுகிறது. அற்புத மாதாவின் லீலைகள் குறித்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது. இதை, ‘உச்சி மேல் இதை மெச்சி ஏற்பாள் அன்னை’ என நம்பிக்கையுடன் போற்றுகிறது. ஆற்றொழுக்கு நடை போல் கவிதை பாய்ச்சல் மெய்சிலிர்க்கச் செய்கிறது. துதி, கோரிக்கை, நம்பிக்கை, வேண்டுதல், பிரார்த்தனை என்ற உட்கருத்துகளோடு எதுகை, மோனை இணைந்து சுவாரசியம் தருகின்றன பாடல்கள். ஆமை போல் மக்கள் ஊர்ந்தனர், குடிசைக்கோ முற்றமில்லை, நேசமுள்ள சிங்காரி, நிறைகுடமே ஒய்யாரி என, மின்னல் கீற்றாய் உவமைகள் மனதை வசீகரிக்கின்றன. இனிய கவிதைகளின் தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு




