/ இலக்கியம் / அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
கருத்து முத்துக்கள் நிறைந்த இலக்கியப் பேழை. ‘விண்மீன்களும், நானும், ஆசானும் மாணவனும், அவற்றில் நான் இறைவனின் பேரொளியைக் காண்கிறேன், நானொரு வெறும் களிமண் பொம்மை என்பதை நான் அவற்றின் மூலம் உணர்கிறேன். என்றாலும் எனது பெருமை, கடவுளின் அருளால் அமைவது. என் உருவம் அவன் உருவம். மனிதர்கள் வானத்தைக் கண்களால் பார்க்கின்றனர். அதனால் தான் அவர்களால் விண்மீன்களைப் பார்க்க முடிவதில்லை. விண்மீன்களை அடக்கமான இதயம் கொண்டு பார்க்க வேண்டும்; மரியாதையான மவுனத்துடன் பார்க்க வேண்டும் என்கிறார் மிகெய்ல் நைமி. சுந்தரத் தமிழ் நடை. ஹேட்ஸ் ஆப் டு புவியரசு!எஸ்.குரு