/ தீபாவளி மலர் / அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ் 2025

₹ 200

இலக்கிய படைப்புகளை வழங்கி வர்ணஜாலம் புரிகிறது அமுதசுரபி தீபாவளி மலர். ஆன்மிகம், கலை சங்கமம், மருத்துவம் சார்ந்த கட்டுரைகள் நிறைந்துள்ளன. தமிழ் வளர்க்கும் அமைப்புகள் பற்றியும் சிறப்பு பகுதி இடம் பெற்றுள்ளது. ஆன்மிக தகவல்களால் நிறைந்த ‘தக்கை ராமாயணம்’ கட்டுரை புதிய பார்வையுடன் உள்ளது. ராம கதையில் இசையின் முக்கியத்துவத்தை கூறுகிறது. தற்கால இலக்கியத்தில் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அம்பை உட்பட பலரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. கவிஞர்கள் கல்யாண்ஜி, சீனு ராமசாமி ஆக்கங்கள் கனிவை சுரக்கின்றன. வாழ்க்கை பாடங்கள், பழைய இலக்கியங்களை மையமாக கொண்ட ஆக்கங்கள், வரலாற்று பின்னணியில் சுவாரசியம் குன்றாமல் தரப் பட்டுள்ளன. வித்தியாசமான கோணத்தில் அணுகி கலகலப்பூட்டுகிறது சினிமா உலகம். அமுத கலசமாக நிறைந்து மணம் பரப்புகிறது அமுதசுரபி தீபாவளி மலர். – மதி


புதிய வீடியோ