/ ஆன்மிகம் / இந்து சைவம் வைணவம் ஓர் அறிமுகம்
இந்து சைவம் வைணவம் ஓர் அறிமுகம்
சைவம், வைணவ தத்துவ அடிப்படைகளை தொகுத்து தரும் நுால். பக்தர்களால் பின்பற்றப்படும் வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன.வேதங்களில் பொதிந்த வைதிக நெறிகளை விளக்கி, உபநிடதங்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதி போன்றவற்றை அறிய தருகிறது. ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்கள் பட்டியலை தந்து திருமுறைகள், மெய்கண்ட நுால்கள் பற்றி எடுத்து கூறுகிறது. சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கிய மாறுபட்ட கோட்பாடுகள் ஒருங்கிணைந்து இருப்பதை விரிவாக தருகிறது. சமய நெறிகள், கோட்பாடுகள், சடங்குகள், வழிபாட்டு முறைகளை தொகுத்து பின்னிணைப்புடன் தரப்பட்டுள்ள நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு