/ கட்டுரைகள் / அனைத்துலகும் இன்பமுற
அனைத்துலகும் இன்பமுற
உலகம் செழிப்படைந்து, மக்கள் வாழ்வு மேன்மையுற வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். நலமான வாழ்வுக்கு தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி, சமூக சூழலை கட்டமைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. இயற்கை வளங்களை பெருக்குவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வை பரிந்துரைக்கிறது. உயிரினங்களுக்கான நீர் மேலாண்மை, அணை பராமரிப்பு, விபத்து தடுப்பு தொழில்நுட்பம், கடல் எல்லை கண்காணிப்பு என விழிப்புணர்வு தருகிறது. மலை வளம், வனத்தின் வளம், நீர் வளம் போன்றவற்றை பேணி மேம்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஆதங்கத்தோடு முன்வைக்கிறது. உலகளாவிய அமைதிச் சூழலை நோக்கிய சமூக நலம் சார்ந்த கருத்தோட்டம் உள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு