/ சிறுவர்கள் பகுதி / அன்புத் தாத்தாவும் அருமைப் பேரன்களும்
அன்புத் தாத்தாவும் அருமைப் பேரன்களும்
கூட்டுக் குடும்ப வாழ்வையும், அதன் பெருமைகளையும் பரப்பும் வகையில் படைக்கப்பட்டுள்ள நாவல். கதையில் தாத்தாக்கள், பேரன்களிடம் கொண்ட பேரன்பு சொற்சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.அன்பு தாக்குதல்கள் வலியில்லாத வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளன. குழந்தை விளையாட்டுகள் சில நேரம் பெரியோருக்கு எரிச்சலையூட்டும் விதமாக அமைந்து விடும். தாத்தாக்கள் பட்டறிவையும், அனுபவத்தையும் கொண்டு ஈடு கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற செய்தி உள்ளது. கூட்டுப் பறவைகளாக வாழும் தத்துவத்தை முன்னெடுத்துள்ளது. பிள்ளைகளை எப்படி சரியாக வளர்க்க வேண்டும் என வலியுறுத்தும் நுால். – புலவர் சு.மதியழகன்