/ பயண கட்டுரை / ஆண்களுக்கு மட்டும் காதல் முதல் கலவி வரை...

₹ 150

ஆண்களின் தேடலை, பெண்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கலை, 23 தலைப்புகளில் விவரிக்கும் நுால். வெற்றி வாழ்க்கைக்கு அன்பு மட்டும் தான் மூலதனம் என்கிறது. ஆண், பெண் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் நிகழும் அபாயங்களை பட்டியலிடுகிறது. உணர்வுகளை புரிந்து கொள்ளும் போது, மகிழ்வான வாழ்க்கை பயணம் நீண்டது என்பதை, சம்பவங்கள் வழியாக உணர்த்துகிறது. ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது உறுதியாக சொல்லப்படுகிறது. பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண் இருக்கிறானா என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறது. பெண்களை எளிதில் ஏமாற்ற முடியும்; அவர்களை புரிந்து கொள்ளும் விதம் தெரிந்தால், ஆண்கள் நினைத்ததை சாதிக்க முடியும் என்கிறது. பெண்ணின் வலிகளை படம் பிடித்து காட்டுகிறது. தாம்பத்திய பிரச்னையை தீர்த்து வைப்பது நீதிமன்றமா, மருத்துவமா என சிந்திக்க வைக்கிறது. பெண் மனதை புரிந்து, மகிழ்ச்சி கடலில் நீந்த துடிப்போர் வாசிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை