/ கதைகள் / அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
மகப்பேறு மருத்துவத்தின் மகத்துவத்தை புரிய வைக்கும் நாவல். மகப்பேறு இல்லாதோருக்கு, வார்த்தைகளால் கிடைக்கும் வலியை வருணித்துள்ளது. லட்சியத்தை மையமாக வைத்து வெறியாக செயல்படும் ஆண்களை கொண்டாடும் சமூகம், குடும்பத்தை கவனித்து, லட்சியத்திற்காக போராடும் பெண்களை கண்டு கொள்வதில்லை என்பதை மையக் கருத்தாக கொண்டுள்ளது.மருத்துவத்தைத் தவமாக மேற்கொண்ட லட்சிய பெண்ணை, ஒரே வினாடியில், ‘வியாபாரி’ என கணவரும், மகளும் புறக்கணிக்கின்றனர். இதனால் மனம் வெதும்பினாலும், விடாப்பிடியாக மகப்பேறு மருத்துவத்தில் சாதனை படைத்து எண்ணியதை நிறைவு செய்வதுதான் கதை. நவீன அறிவியல் கருத்துகள் நிறைந்தது. உணர்வுகளால் உணர வேண்டிய நுால். புலவர் சு.மதியழகன்