/ புத்தக மதிப்புரை / அன்லாக்கிங் தி மைண்ட் (ஆங்கிலம்)

₹ 199

உணர்ச்சியை கையாளும் வழிமுறைகளை கூறும் நுால். ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களுடன் உள்ளது. மூளையில் இருந்து உணர்வுகள் சிறகடிப்பதை எடுத்து கூறுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் பொருத்தமான கோட்டுச்சித்திரங்கள் தரப்பட்டுள்ளன. சின்ன சொற்றொடர்களில் தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. இளம் தலைமுறைக்கு வரமாக அமைந்துள்ளது. ஒரு கோவில் கருவறையில் ஒலிக்கும் மந்திர ஓசை, அர்ச்சகரின் உணர்வின் வெளிப்பாடு; தெருவில் அரசியல் கட்சி தொண்டன் போடும் கோஷமும் உணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்பதை தெளிவாக்குகிறது. சில திரும்பத் திரும்ப படிக்க உகந்தவையாக உள்ளன. உணர்ச்சியை புரிந்து அதற்கு ஏற்ப வாழ உதவும் நுால். – சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ