Advertisement

CLASSIC INDIAN TALES


CLASSIC INDIAN TALES

₹ 250

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • ‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

  • ‌‌வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.இ-மெயில்: chennai.sales@jaicobooks.com

  • திருப்புகழில் கூறப்படும் விநாயகர் பற்றிய நுால். அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. முருகன், அருணகிரிநாதரை காப்பாற்றிய விதத்தைச் சொல்கிறது. முருகன் அருள் பெற்ற வரலாற்றை தெரிவிக்கிறது. பொய்யா கணபதியின் அருள் பெற்றதை திருப்புகழ் பாடல் வழியாகத் தருகிறது. கணபதியின் பல பெயர்களையும், அவற்றின் காரணத்தையும் விளக்குகிறது. கணபதி செய்த அருஞ்செயல்களை விரிவாகத் தருகிறது. விநாயகருக்கு அமைந்த கைகள் பற்றி விளக்குகிறது. கொழுக்கட்டை என்ற மோதகம் பற்றிய தத்துவ விளக்கத்தை தருகிறது. விநாயகருக்கு பிடித்த முப்பழம் மற்றும் நிவேதன பொருட்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. – புலவர் ரா.நாராயணன்

  • சோழப் பேரரசின் செல்வாக்கை கூறும் நுால். சோழர்களின் தொன்மை, சங்ககால சோழர்கள், களப்பிரர் ஆட்சி, சோழர் மறுமலர்ச்சி, மாமன்னன் ராஜராஜன் பற்றிய விபரங்களை தருகிறது. கல்வெட்டுகள், செப்பேடுகள், புராணங்கள், ராமாயணம், மகாபாரத காவியங்களின் வழியாக வரலாற்றை பதிய வைக்கிறது. ராஜகேசரி, பரகேசரி என்ற பட்டங்கள் சோழருக்கு உள்ளதாக செப்பேடுகள் சொல்வதை எடுத்துரைக்கிறது. சிலப்பதிகாரம், பெருங்கதை, மனுநீதி, சிபி சக்கரவர்த்தி பற்றி பேசுகிறது. குலோத்துங்க சோழன் படையெடுத்து பல நாடுகளை கைப்பற்றி, கலிங்கப் போரில் வென்றதை எடுத்துக் கூறுகிறது. சுந்தர பாண்டியனிடம் தோற்று சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றதையும் குறிப்பிடுகிறது. சோழர் சாம்ராஜ்ய வரலாற்று நுால். – முனைவர் மா.கி.ரமணன்

  • முயற்சியும் பயிற்சியும் வெல்லும் என நம்பிக்கையூட்டும் நுால். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய சிந்தனையை துாண்டுகிறது. நேரடியாக கேட்பது நல்ல பழக்கம் என்றாலும், சங்கடப்படுத்தும் வகையில் கேட்பது அறிவற்ற செயல் என உணர்த்துகிறது. பணிவு தான் மனிதனை உயர்த்தும் என்கிறது. எதையும் ஒப்புக்கொள்வது, வாழ்வில் முன்னேற படிக்கட்டாக அமையும் என்கிறது. விபத்துகளுக்கு காரணம் துாக்கமின்மை. சரியாக துாங்கவில்லை என்றால், மன அழுத்தம் ஏற்படும் என எச்சரிக்கிறது. எதையும் எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்கும் செயலை உணர்த்துகிறது. மாணவர் முதற்கொண்டு பெரியோர் வரை உற்சாகப்படுத்தும் நுால். – முகிலை ராசபாண்டியன்

  • மகாகவி பாரதியின் பன்முக ஆளுமையை விவரிக்கும் நுால். பாரதியை தமிழின் காவலர், கடவுள் வழிபாட்டாளர், நாட்டு பற்றாளர், கவிஞர், கதாசிரியர், பேச்சாளர், நகைச்சுவை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பல நிலைகளிலும் ஆய்வு செய்து கருத்துக்களை முன்வைக்கிறது. எட்டயபுரம் காந்திமதி நாதன் ஆணவத்தை அடக்க, ‘பாரதி சின்னப் பயல்’ என ஈற்றடி வெண்பா பாடியது முதல், படைப்புகளை சான்றாகக் கொண்டுள்ளது. பாரதியை பண்பாட்டு காவலர், உளவியல் அறிஞர், பெண்ணிய படைப்பாளர், தனிப்பாடலாசிரியர், உயர்ந்தோரைப் போற்றும் உத்தமர் என பல நிலைகளில் போற்றுகிறது. பாரதி படைப்புகளை ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்

  • திபெத் நாட்டின் புவியமைப்பு, வரலாறு தகவல்களை கொண்டுள்ள நுால். திபெத்தின் சமூக கலாசாரம், புத்த சமய பரவல், மறுபிறவி நம்பிக்கை பற்றி விரிவான செய்திகள் உள்ளன. உலகின் உயரமான இமயமலை பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. பெண் துறவியர், மடாலயங்கள் பற்றி விவரிக்கிறது. விக்கிரம சீலா, தட்ச சீலா உட்பட பழைய பல்கலைக்கழக புகழ் கூறப்பட்டுள்ளது. தலாய்லாமாக்கள் புத்தரின் மறுபிறப்பாக நம்புவதை கூறுகிறது. தலாய்லாமா மதநல்லிணக்கம் கண்டதற்கு நோபல் பரிசு பெற்றதை குறிப்பிடுகிறது. உலகில் பல லட்சம் பேரைக் கொன்ற செங்கிஸ்கான் படை எடுப்பு விபரங்களும் தரப்பட்டுள்ளன. விடுதலைக்காகப் போராடும் திபெத் உலக நாடுகள் உதவியை நாடியுள்ளதையும் கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்

  • மதுரை அடையாளமான சித்திரை திருவிழா மகத்துவத்தை கூறும் நுால். கவிதை, சிறுகதை, கட்டுரை கோணத்தில் திருவிழாவை விவரிக்கிறது. குழந்தைகளின் கொண்டாட்டம் வாயிலாக ஆன்மிகம், பாரம்பரியம், கலாசாரம் கடந்து குடும்ப நிகழ்வாக சொல்கிறது. சிறுவர்கள் கடவுள் வேடமிட்டு அருள் வாக்கு சொல்வது, மகளை சாமியாக பார்க்கும் தந்தையின் நம்பிக்கையை கூறுகிறது. சிறுவருக்கு பிடித்தமான தின்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் காத்திருந்து வாங்குவதை, பொருளாதார பார்வையில் விவரிக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தேவையான வாசனை திரவியங்கள், அபிஷேக பொருட்கள் பற்றி கூறுகிறது. திருவிழா கால மதுரையை கண்முன் நிறுத்தும் நுால். – டி.எஸ்.ராயன்

  • குடும்பத்தில் சாதாரணமாக சமைப்பது சாதம்; அதுவே தெய்வத்திற்கு படைக்கப்படும்போது, ‘ப்ர’ என்ற அடைமொழியுடன், ‘ப்ரசாதம்’ ஆகிறது. இதில், ‘ப்ர’ என்ற பதம் தெய்வத்தன்மையுடைய என பொருள் தருகிறது. இதையே பேச்சு வழக்கில், ‘பிரசாதம்’ என்கிறோம். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வகை நைவேத்தியம் பிரபலமாக இருக்கிறது. அழகர் கோவிலில் தோசை, காஞ்சிபுரத்தில் இட்லி, திருக்கண்ணபுரத்தில் முனியோதரன் பொங்கல் பிரபலம். இதே போல பல கோவில்களின் பிரசாதப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. பண்டி என வித்தியாச பெயர் உடைய பிரசாதம் பற்றியும் தகவல் இருக்கிறது. கோவில் பிரசாதம் படைக்கப்படும் விதம் போன்ற தகவல்கள் உள்ள நுால். – தி.செல்லப்பா

  • பக்தர்கள் உடல் நலன் காக்க மகான்கள் அருளிய கவசப் பாடல்களின் தொகுப்பு நுால். காசிப முனிவரின் விநாயகர் கவசம், வரதுங்கராம பாண்டியரின் சிவ கவசம், தேவர்களின் சக்தி கவசம், தேவராய சாமிகளின் கந்தர் சஷ்டி கவசம் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன. பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசம், இடும்பன் கவசம், பூவை கலியாண சுந்தரனாரின் கடம்பன் கவசம், காஞ்சி நாகலிங்க முனிவரின் கந்தர் கவசம் போன்றவையும் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு உரையும், குறிப்புரையும் தரப் பட்டுள்ளன. விநாயகரின் 45 பெயர்கள், சக்தியின் 52 பெயர்கள் தரப்பட்டுள்ளன. சைவ சமயத்தவருக்காக இலக்கிய நயமுடன் அமைந்துள்ளது. பக்தியோடு படிக்க உகந்த தொகுப்பு நுால். – பின்னலுார் விவேகன்

  • வள்ளுவரின் வரலாற்றை தெளிவுபடுத்தும் நுால். வாழ்க்கையில் பெரும்பங்காக இல்லற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இல்லறத்தில் பெண் பெறும் முதன்மை இடம் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அறநெறி, பரிவு, பகிர்வு, பொறுப்பு, ஒழுக்கம் என்ற தகுதிகள் இல்லறத்திற்கு உரியவை என்பதை தெரிவிக்கிறது. அறநெறி காலத்தில் தோன்றியதை குறிப்பிடுகிறது. விருந்தோம்பல், செய்ந்நன்றி அறிதல், நடுவு நிலையை இல்லறத்திற்கு உரிய பண்புகளாக கூறுகிறது. தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் என அனைவரையும் போற்றுவது இல்லறத்திற்கு உரிய பண்பு என விளக்குகிறது. திருக்குறள் நெறியில் வாழ்க்கை அமைக்க அறிவுறுத்தும் நுால். – முகிலை ராசபாண்டியன்

புதிய வெளியீடுகள்