/ பயண கட்டுரை / ஆன்மிகச் சுற்றுலா பயணக் கட்டுரைகள்

₹ 100

அயோத்தி, அலகாபாத், வாரணாசி, கயாவுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற அனுபவங்களை தரும் நுால். பயணத்தை திட்டமிட்டு முடிவு செய்வது, முன்பதிவு, பயணத்தில் முதியவர்கள் எதிர்கொள்ளும் மூட்டு வலி, சர்க்கரை நோய்க்கு மருந்துகள் பற்றி கூறப்பட்டுள்ளது. சாப்பாட்டு பிரச்னை, தங்குமிடம், கூட்டாக செல்வது, நேர மேலாண்மை, தேவையான முதல் உதவி போன்றவை பற்றி விவரிக்கிறது. செல்ல வேண்டிய புண்ணிய ஸ்தலங்கள், கோவில்கள் திறக்கும் நேரங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் இடங்கள், செய்யும் முறைகள் முழுமையாக கூறப்பட்டுள்ளன. காசி யாத்திரை செல்பவர்கள், ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை வழிபட்டால் தான் புனித யாத்திரை நிறைவடையும் என்ற தார்ப்பரியமும் கூறப்பட்டுள்ளது. காசி யாத்திரை செல்ல நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால்.– புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ