/ ஜோதிடம் / அனுபவ மனை சாஸ்திரம்
அனுபவ மனை சாஸ்திரம்
சாஸ்திரப்படி வீட்டு மனை வாங்க வழிகாட்டும் நுால். மனையில் திசை பார்த்து வீடு கட்டுவது, குறையுள்ள வீடுகளை சாஸ்திரப்படி புதுப்பிக்கும் விபரங்களை விவரிக்கிறது. மனை இடம் கிழக்கு – மேற்காக அமைந்திருக்க வேண்டும் என்கிறது. மனைக்கு எதிரே செங்குத்தான வீதி அமையாது இருக்க பரிந்துரைக்கிறது. செம்மண் பூமியாக இருந்தால் வசதி வாய்ப்பு பெருகும் என்கிறது. வெளிர் மண், கருமை மண், உப்பு மண் குறித்து விவரித்து சொல்லப்பட்டுள்ளது. கட்டட உரிமையாள ருக்கும், இடத்துக்கும் பொருத்தம் பார்ப்பது பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. தலைவாசல் சுற்றுச்சுவர் அமைப்பு முறைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. புதிதாக வீடமைக்க விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன்




