/ ஆன்மிகம் / அப்பர் அருளிய இரு வாரங்கள்

₹ 100

திருநாவுக்கரசரை நல்ல சிவ பக்தர், திருத்தொண்டர், இனிய கவிஞர், சிறந்த தத்துவ ஞானி என கூறும் நுால். திருநாவுக்கரசர் பிற சமய கருத்துகளை கற்றவர் என்பதால் தத்துவ ஞானி என்கிறது. துன்பத்துக்கு காரணம் பழவினை என ஏற்றதையும் கூறுகிறது. இறைவன் திருவடி அடைய இயல்பான வாழ்வு மேற்கொள்ள கூறுகிறது. சிவஞான போதத்தின் சூத்திரம் விளக்கப்பட்டு உள்ளது. நாவுக்கரசர் இறையுண்மையை நிறுவிய தன்மையை, பாடல்கள் மற்றும் வாழ்வு நிகழ்ச்சிகள் வாயிலாக விளக்குகிறது. நாவுக்கரசர் மேற்கொண்டதே உலகின் முதல் உண்ணாவிரதம் என்கிறது. உழவாரப்பணி குறித்தும் விளக்குகிறது. இறுதியில் நாவுக்கரசரின் பெருமை கூறப்பட்டுள்ளது. பயனுள்ள ஆன்மிக நுால். – முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை