/ ஆன்மிகம் / அப்பர், சம்பந்தர், சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள்
அப்பர், சம்பந்தர், சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள்
சைவமும், தமிழும் வளர்த்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை விளக்கும் நுால்.திருநாவுக்கரசர் பிறப்பு, வளர்ப்பு, சமணம் சேர்ப்பு, சைவம் மீட்பு, சுண்ணாம்பு காளவாயில் தவிப்பு, இறந்தவர் உயிர் மீட்பு என அப்பர் வரலாற்றை விவரிக்கிறது. அதுபோல் திருஞானசம்பந்தர் ஞானப்பால் பருகல் துவங்கி, ஜோதியில் கலத்தல் வரை அற்புதமாக கூறப்பட்டுள்ளது. சுந்தரர் தேவாரத்தில் புதைந்துள்ள புதுக்கருத்தும் விளக்கப்பட்டுள்ள நுால்.– முனைவர் மா.கி.ரமணன்