/ இலக்கியம் / அற இலக்கியங்களில் இல்லறம்
அற இலக்கியங்களில் இல்லறம்
பண்டைய தமிழிலக்கியங்களில் திருக்குறள் தொட்டு, அறம் சார்ந்த இலக்கியங்களில் பொதிந்த இல்லற நெறிகளை ஆய்வு செய்து பதிவு செய்துள்ள நுால். இல்லற நெறிகள் கூறும் இலக்கியங்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அறம் என்பதற்கு விரிவான விளக்கத்துடன் துவங்குகிறது. நேர்மை, நல்லியல்பு, நல்லொழுக்கம், நற்பண்பு, நன்னடத்தை ஆகியவற்றின் கலவையாக அமைந்த அறம் என்ற சொல், இல்லறப் பண்பாட்டுக்கு உலகளவில் எந்த அளவு பெருமை சேர்த்துள்ளது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. அறம் சார்ந்த தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற இல்வாழ்க்கைச் சிறப்புகள், மனைமாட்சி, மக்கள்பேறு, பெருமைகள், விருந்தோம்பல், அன்புறவு, நம்பிக்கைகள் போன்ற இல்லற மேம்பாட்டுச் சிந்தனைகளை ஆய்ந்து எளிய நடையில் விளக்கியுள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு