/ கதைகள் / அரபுக் கதைகள் சிறுவர் இலக்கியச் செம்மல்
அரபுக் கதைகள் சிறுவர் இலக்கியச் செம்மல்
1001 இரவு கதைகள் உலகப் புகழ் பெற்றது. அக்கதைகளை பெரியவர்கள் தாராளமாகப் படிக்கலாம். ஆனால், சிறுவர்கள் படிக்கக் கூடாத கதைகளும் உள்ளன. எனவே, அவைகளை நீக்கவிட்டு சிறுவர்களுக்கு ஏற்ற கதைகளை மட்டுமே இத்தொகுதியில் அளித்துள்ளார். இது முதல் பாகம். மேலும் பல பாகம் தொடரும் என்பதே சிறுவர்களுக்கு இனிய செய்தியாகும். இத்தொகுதியில் நாம் அனைவரும் திரைப்படம் மூலம் நன்கறிந்த அலி பாபாவும் நாற்பது திருடர்களும், மாயக்குதிரை போன்ற 10 சுவையான கதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளுக்கு படங்கள் இடம் பெற்றிருப்பதும் கூடுதல் சிறப்பு. - எஸ்.திருமலை