அரண்
13/66, 4-வது தெரு, பி.பி.நகர், அரும்பாக்கம், சென்னை-106. பக்கம்: 336 தேனீக்கள் ஏராளமான மலர்களிலிருந்து தேனைச் சேகரித்து, நமக்களிப்பது போன்று, கட்டுரை ஆசிரியர்கள் தாம் கற்ற அரிய பல நூல்களிலிருந்து, சேகரித்த விஷய சேகரங்களைத் தங்கள் கட்டுரைகள் மூலம் நமக்கு வழங்குகின்றனர். இதன் மூலம் தேடலும், புரிந்துக் கொள்வதும் நமக்கு எளிதாகிறது. அவ்வகையில் கவிராசர் மன்றக் கருத்தரங்கத்தில் பல பேராசிரியர்களால் தொகுப்பாக இந்நூல் உருப்பெற்றுள்ளது.அரவான் வழிபாடு, அப்துல் ரகுமான் கவிதைகளில் பெண்ணியம், ஆசாரக் கோவையில் உடற்சார் ஒழுக்கம், இலக்கியங்களில் கலைகள், சிறுகதைகளில் மொழி நடை, பாரதியார்கவிதையில் பெண்ணியச் சிந்தனை, புதுக்கவிதையில் பெண் சித்தரிப்புகள் என, பரந்துபட்ட பார்வையில், பழங்கால, தற்கால இலக்கியங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அனைத்துகட்டுரைகளும் எழுதப் பெற்றுள்ளன. வாசிப்பை நேசிப்பவர்களுக்கு மகிழ்வை வழங்கும் நூல் இது.