/ கதைகள் / அரண்மனை குடும்பம்

₹ 700

கற்பனையுடன் எழுதப்பட்டுள்ள நாவல். பழமையும், புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரண்மனை குடும்பத்தில் நடப்பதை விவரிப்பதாக அமைந்துள்ளது. சேலம், ஏற்காட்டில் சம்பவங்கள் நிகழ்ந்ததாக கதைக்களம் சொல்லப்பட்டுள்ளது. அரண்மனையின் ஆண் வாரிசு கணேஷ், பணி நிமித்தமாக நாக்பூர் சென்றபோது, நாகர் இனப்பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறான்.ஆனால், மாமன் மகளை அவனுக்கு மணம் முடிக்க குடும்பம் விரும்புகிறது. இது நிறைவேறவில்லை என்பதால் சிக்கல் துவங்குகிறது. சதிகாரர்கள், சாமியார், பாம்பை வணங்கும் பெண், கொல்ல நினைத்தவனை கொன்ற பாம்பு மற்றும் விபத்து என கதை நகர்கிறது. அடுத்து என்ன நிகழுமோ என விறுவிறுப்பை துாண்டும் வகையில் உள்ள நுால். – புலவர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ