/ கதைகள் / அறவான்
அறவான்
அறம் சார்ந்த வாழ்வின் அன்பு வயப்பட்ட நிலையை எடுத்துக் கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதல், திருமணம், கள்ளம், கபடம் என இயங்கும் ஆண் – பெண் உறவு அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளது. கதைகள் நல்லதுக்கும், அல்லதுக்குமான தீராத போராட்டத்தை காட்டுகின்றன. மனித உறவில் சிக்கல், அன்பு, காதலில் உள்ள அறத்தையும், அறமின்மையையும் பேசி வசீகரிக்கின்றன. கொரியர் அலுவலக பின்னணியில் ‘மெலியார்’ கதையும், புராண வகைமையான ‘கங்கு’ கதையும், அதிர்ச்சி ஏற்படுத்தி விழிப்பு தரும் ‘பாய்ஸ்’ கதையும் தனித்துவமாக தெரிகின்றன. தீமையின் கண் கூசும் வெளிச்சம், விட்டில் பூச்சி விரும்பி விழுமளவு வசீகரமானது. ஆனால், அறத்தின் சிற்றொளியே மானுடத்தை வழி நடத்துகிறது. அதை அணையாது காக்க எத்தனிக்கும் கதை தொகுப்பு நுால். – ஊஞ்சல் பிரபு




