/ தத்துவம் / அறிந்ததினின்றும் விடுதலை
அறிந்ததினின்றும் விடுதலை
இக்கட்டான வாழ்வு சூழல்களில் இருந்து விடுவிக்க உதவும் கருத்துள்ள தத்துவ நுால். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது தத்துவ அறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய உரைகள் கட்டுரையாக தரப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கான காரணத்தை அலசுகிறது. வாழ்வில் முடிவில்லாத பிரச்னை ஏதும் உண்டா என கேள்வி எழுப்பி, தக்க பதிலை சிந்தித்து அறியும் வகையில் அறிவுரைகளாக தருகிறது. சார்ந்திருப்பதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கிறது. மனதில் அன்பை நிரப்பிக் கொள்ளும் வழிமுறைகளை போதிக்கிறது. அதன் வழியாக அமைதியை அனுபவப்பூர்வமாக உணர வழிகாட்டுகிறது. எண்ணங்களை விசாரணைக்கு உட்படுத்தி தெளிவு ஏற்படுத்தும் தத்துவ நுால். – ராம்




