/ அறிவியல் / அறிவியற் பார்வையில் சங்க இலக்கியச் செய்திகள்

₹ 100

சங்க இலக்கியங்களை அறிவியல் பார்வையில் அணுகி ஆராய்ந்துள்ள நுால். இயற்கை சார்ந்த உவமைகளை தொடுத்து ஒப்பீடு காட்டி விளக்கம் தருகிறது. பண்டைக் காலத்தில் தமிழகத்தில் நிலவிய இயற்கைச் சூழல் பற்றிய புரிதலைக் காட்டுகிறது. பழந்தமிழ் புலவர்கள் கற்பனைத் திறனை, அறிவாற்றலோடு பொருத்தி பார்த்துள்ளதை விளக்குகிறது. சங்க கால இலக்கியங்களில் பூக்கள் மற்றும் பறவைகளின் உறுப்புகளை ஒப்பீடு செய்து, மேன்மையாக பொருத்திக் காட்டப்பட்டிருக்கும் உவமைகள் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றன. சங்க இலக்கியங்களில் காணப்படும் இயற்கை சார்ந்த விழுமியங்களை வெளிப்படுத்தும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ