/ வரலாறு / அறிவோம் அருங்காட்சியகம்
அறிவோம் அருங்காட்சியகம்
அருங்காட்சியகம் குறித்து விளக்கும் நுால். அருங்காட்சியகம் உருவான வரலாற்று சுருக்கமாக முதலில் தரப்பட்டுள்ளது. எந்த சட்டப்படி உருவாக்கப்படுகிறது என்ற அடிப்படையும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அருங்காட்சியகத்தின் தோற்றம் பற்றி கூறப்பட்டுள்ளது. பழங்கால பொருட்களின் சேகரிப்புகளை காட்சிப்படுத்த வேண்டிய அவசியத்தை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் முக்கிய அருங்காட்சியகங்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியத்துவமும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய கலைகளின் சிறப்பை உலகுக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் கூறப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் சிறப்புகளையும், இன்றியமையாமையையும் எடுத்துரைக்கும் நுால். – ஒளி




