/ கட்டுரைகள் / அறிவுலக மேதை டாக்டர். ராம் மனோகர் லோகியாஓர் அறிமுகம்

₹ 120

1, சேனைத்தலைவர் தெரு, ஸ்ரீமுஷ்ணம் தெரு, ஸ்ரீமுஷ்ணம்-608 703, கடலூர் மாவட்டம்.(பக்கம்: 166) டாக்டர் ராம் மனோகர் லோகியா இந்த தேசத்து சோஷலிஸ்ட் இயக்கத்தின் நிறுவனர். சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்ந்த மக்களுக்காகவும், வாழ்க்கையில் எந்த நலனையும் அனுபவிக்காத, ஏழை மக்களுக்காக இடைவிடாது போராடியவர். வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளாதவர். மிகச் சக்தி வாய்ந்த பேச்சாளராகவும், தலைசிறந்த பார்லிமென்டேரியனாகவும் விளங்கியவர். அவரது குடும்பத்தார் பல தலைமுறைகளாக (லோஹா - இரும்பு) இரும்பு வணிகம்செய்து வந்ததால், "லோகியா என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. அவரது சுருக்கமான வரலாறு, இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தவிர ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, ஒரு சமதர்ம வீரராக, பாமர மக்களின் தலைவனாக, ஒரு எழுத்தாளராக, புதிய சித்தாந்தங்களை உருவாக்குபவராக பல்வேறு கோணங்களில் அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரைகளாக தொகுத்துத் தந்துள்ளார் ஆசிரியர். மிகவும் பயனுள்ள நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை