/ பொது / அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

₹ 200

‘இந்த உலகில், இரண்டு வகையான துன்பப்படுகிற மக்கள் உள்ளனர். ஒரு வகை, மத தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவோர்; மறு வகை, அவர்களைப் பின்பற்றி நடக்காதோர். ஆனால், கொஞ்சம் கூட கவலைப்படாத, என்னைப் போன்ற ஒரு மூன்றாவது வகையைச் சேர்ந்த ஒரு மனிதனைக் காண்பது மிகவும் கடினம்’ (பக். 15). இப்படி சுயதரிசனம் தரும், ஓஷோவின், ‘போலியான மதம்’ என்னும் முதல் கட்டுரை துவங்கி, ‘கடவுள் நம் எல்லாருக்கும் தெரிந்த யாருமாகவும் இல்லாதவர்’ முடிய, 10 கட்டுரைகள் உள்ளன.‘காந்தி தன் மீது மிகவும் வன்முறையாக நடந்து கொண்டார். வெறுமனே எந்த சிறு காரணம் கிடைத்தாலும் போதும், அவர் உண்ணாவிரதம் இருந்து விடுவார். உண்ணாவிரதம் இருப்பது வன்செயல் தான்’ (பக். 50).‘ஒருவர் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அப்போது நீ மறு கன்னத்தைக் காட்டினால், நீ இந்த வயதில் வன்முறையை ஊக்கப்படுத்துகிறாய்; அது, அகிம்சை அல்ல’ (பக். 64).‘தியானத்தைப் பற்றி அறிந்தவர்கள், மரணத்தைப் பற்றி அறிந்தவர்களாக இருக்கின்றனர். இறப்புக்கு முன் மரணத்தைப் பற்றி அறிவதற்கு அது ஒன்று மட்டுமே வழியாக இருக்கிறது’ (பக். 168).‘அன்பு என்பதன் பேரால் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வது தான் திருமணம் என்பதன் நோக்கமாக உள்ளது’ (பக். 101).‘இத்தனை ஆண்டு காலமும் மதம் என்று அழைத்துக் கொண்டு, வெறும் முட்டாள்தனத்தில் நம் காலத்தை வீணாக்கி விட்டோம்’ (பக். 266).இப்படி நூல் முழுவதும் மதம், கடவுள் பற்றிய முரண்பட்ட சிந்தனைகளை ஓஷோ வெளிப்படுத்தியிருந்தாலும், அவரது பெரும்பாலான கருத்துக்கள் சிந்தனைக்கு விருந்தாக உள்ளன. படிப்பதற்கு மிகவும் சுவாரசியமான நூல்.– பின்னலூரான்


முக்கிய வீடியோ