/ சமயம் / அற்புதமான இந்து மதம் 1000 உண்மைகள்

₹ 100

பக்கம்: 256 உலக சமயங்கள் அனைத்திலும் மிகவும் பழமையானது இந்து மதம். இதன் ஆதிப்பெயர் சனாதன தருமம், வைதிக தருமம் என்பனவாம். பெர்சியர் வருகைக்குப்பின், சிந்துநதிப் பகுதியில் வாழ்ந்தவரை இந்து என்றும் அவர்கள் கடைபிடித்த மதம் இந்து மதம் எனவும் அழைக்கலாயினர்.(சிந்து - இந்து எனத் திரிந்தது) வழிபாட்டு முறைகளிலும், கொள்கைகளைக் கடைபிடிப்பதிலும், இந்து மதம் மிகவும் சுதந்திரம் கொடுத்துள்ளது. பல பெயர்களால் வழிபட்டாலும், இறைவன் ஒருவனே என்பது இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை.எந்த உயிருமே கடவுளின் இருப்பிடம் என்பதே, இந்து மதக் கோட்பாடு. அன்பே அதன் அடிப்படை.இறைவன் உண்மை (சத்தியம்) அவனை அடையும் வழி நன்முறை(அகிம்சை). பற்றினை விடுதல் இந்து சமயம் போதிக்கும் உயர்நெறி. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்துமதம். வேதங்களும், ஆகமங்களும் இந்து மதத்தின் அடிப்படை. ஆகம அடிப்படையில், வந்தவை அறுவகைச் சமயங்கள்.வேள்வி செய்தலே வேதநெறி, ஆகமங்கள் அடிப்படையில் விக்கிரக வழிபாடு பிறந்தது. வருண தருமம் உயர்வு, தாழ்வு அடிப்படையில், பிறந்ததன்று; தொழிலால் வந்ததே.இன்றைய இந்து மதத்தின் பெரும் பிரிவுகளாக, சைவம், வைணவம் விளங்குகின்றன. நாயன்மார்களின் திருப்பாசுரங்களும், வைணவ ஆழ்வார்களின் பிரபந்தங்களும் இந்து மதத்தை ஏற்றமுறச் செய்பவை. ஞானம் உடையவர்க்கு ஆலயங்கள், விக்கிரக வழிபாடு வேண்டுவதில்லை. தன்னிலேயே கடவுளைக் கண்டவர் சித்தர்கள். இவ்வாறாக, ஆயிரம் அரிய செய்திகளை இந்நூல் நமக்குத் தருகிறது. படித்துப் பயன் பெறலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை