Advertisement

வேதம்  எனப்படுவது...?

₹ 80

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்கம்: 160 மொத்தம் 1,330 குறட்பாக்களை கொண்ட திருக்குறளை 10,552 பாடல்கள் கொண்ட ரிக் வேதத்துடன் ஒப்பிட்டு, ""நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளாய் முப்பாலாய் உரைத்த வள்ளுவன் என்ற உக்கிரப் பெருவழுதியின் கூற்றுக்கு ஆதாரமாய் பலமான, பல கருத்துக்களை முன் வைத்துள்ளார் நூலாசிரியர்.களவியல், இல்லறவியல், அருளியல், மெய்யியல் இப்படி, 11 தலைப்புகளில், வேதத்துடன் ஒப்பிட்டு, ஆய்வு செய்து, இறுதியில் வேதம் எனப்படுவது, வள்ளுவர் போதித்த நெறிமுறைதான் என்று விடை பகர்கின்றார். ஒரே வரியில் கூறுவதானால், ரிக் வேதம் - மத அடிப்படையில் நெறிமுறைப்படுத்துகிறது. திருக்குறளோ குறிப்பிட்ட மதவெறிக்கு உட்படாமல், பொது மறையாக விளங்குகிறது என்பதுதான் ஆய்வின் முடிவு, வாதங்களைத் தொய்வின்றி படிக்கும் வகையில் முன் வைத்திருப்பது, நூலாசிரியரின் திறமையைப் புலப்படுத்துகிறது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்