/ இலக்கியம் / ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

₹ 225

பொதுவுடைமை கொள்கைக்காக தன் உடைமைகளைத் தியாகம் செய்து வளர்த்தவர்களில் தோழர் ஜீவா முக்கியம் ஆனவர்.தன் எழுத்தாலும், பேச்சாலும், 56 ஆண்டுகள் வாழ்ந்தது, மக்கள் பணியாற்றிய சேவையை இந்த நுால் அழகுடன் வெளிப்படுத்துகிறது.ஜீவாவின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க, அவரைப் பற்றிய 19 நுால்கள் எழுதிய கவிஞர் ஜீவபாரதியின் உழைப்பு, இந்த தொகுப்பு நுாலில் ஒளி வீசுகிறது. ஜனசக்தி, தாமரை ஆகிய இதழ்களை உருவாக்கி, அதில் எழுதிய கட்டுரைகள் இந்நுாலில் கரும்புகளாய் கட்டி வைக்கப்பட்டு உள்ளன.மேலும், 26 தலைப்புகளில் ஜீவாவின் சிந்தனை ஓவியங்கள் படிப்பவரின் விழிகளுக்கு புதிய ஒளி தருகின்றன.தமிழ் இலக்கியம் பற்றிய முதல் கட்டுரையில், செல்வம் என்பது தனக்கானது அன்று. தானம் கொடை செய்து மக்கள் யாவரையும் உயர்த்துவதற்கானது என்று கூறி, அறிவியல் பார்வை அவசியம் என்றும் உணர்த்துகிறார்.– மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை