/ வாழ்க்கை வரலாறு / அரும்பும் நினைவுகளில் அவ்வை சண்முகம்
அரும்பும் நினைவுகளில் அவ்வை சண்முகம்
நாடக கலைஞர் அவ்வை சண்முகத்துடனான நினைவுகளை பகிரும் நுால். கலைஞர், அரசியல்வாதி, படிப்பாளி, எழுத்தாளர், மனிதநேய பண்பாளர் என பன்முகங்களுடன் விளங்கியதை மனதில் பதிய வைக்கிறது. சகோதர ஒற்றுமை, எவரையும் மதிக்கும் பண்பு, பெற்ற குழந்தைகளிடம் கண்டிப்பு, பாசம் என நெறிமுறையுடன் வாழ்ந்ததை விவரிக்கிறது. மரணம் வருவதை முன்கூட்டியே கணித்திருந்ததை குறிப்பிடுகிறது. காதலித்து மறுமணம் புரிந்தது புதிய செய்தியாக உள்ளது. மலைப்பு தரும் அனுபவங்களின் தொகுப்பு நுால். – சீத்தலைச் சாத்தன்