/ கட்டுரைகள் / அறுபதுக்கு அப்புறமும் அற்புத வாழ்க்கை!

₹ 100

முதுமையில் இனிமையாக வாழும் வழிமுறைகளை கூறும் நுால். தவிர்க்க வேண்டிய உணவு வகைகள், மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி முறைகளை நிரல்படுத்துகிறது. நீரிழிவு நோயை நீக்க, ரத்த சர்க்கரையை குறைக்க, மறதி நோய்களை போக்க, மன அழுத்தத்தை நிர்வகிக்க, போதுமான அளவு துாக்கத்தை பெற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. மது அருந்துவதை விடவும், ஞாபக மறதியை போக்குவதற்கான வழிகளும் சுட்டப்பட்டுள்ளன. நினைவாற்றல் இழப்புக்கான காரணங்களும், தடுக்கும் வழி வகைகளும் கூறப்பட்டுள்ளன. எளிய யோகாசன முறைகளும், சிரிப்பு சிகிச்சை முறையும் பதிவிடப்பட்டுள்ளன. வாழ்க்கை முறையை வசதியாக வகுத்துக்கொள்ள, முதிர்ச்சியுடன் வாழ ஆலோசனை தரும் நுால். – புலவர் சு.மதியழகன்