/ வாழ்க்கை வரலாறு / அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
ஜி.டி.நாயுடு என்று பிரபலமாக அழைக்கப்பட்ட, கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று நுால். தமிழக அறிவியல் மேதைகளில் ஒருவர். இயந்திரவியல் மற்றும் விவசாயத் துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சி மற்றும் புதுமை செய்தவரின் வாழ்க்கை நிகழ்வுகள் தொகுத்து எழுதப்பட்டுள்ளன.விந்தைகள் புரிந்த வினோத மனிதர். துணிவுக்கும், கண்டிப்புக்கும், விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தொழில், ஆராய்ச்சி என சுறுசுறுப்பான அலுவல்களுக்கிடையே, அன்றாடம் நுால் படிப்பதற்கும் அவர் நேரம் ஒதுக்கியிருந்தது குறித்தும் எழுதப்பட்டுள்ளது.– வி.விஷ்வா