/ கட்டுரைகள் / அதோ அந்த பள்ளிக்கூடந்தான்
அதோ அந்த பள்ளிக்கூடந்தான்
சமூகம் மீது படிந்துள்ள கழிவு, மன அழுக்கை நீக்க முயற்சிக்கும் கட்டுரை தொகுப்பு நுால். வாழும் இடத்தை போல், பணி செய்யும் இடத்தையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என உணர்த்துகிறது. விதிமீறலில் கல்லா கட்டுபவர்களை சாடுகிறது. மன்னிப்பில் கிடைக்கும் மனநிறைவு, பள்ளி குழந்தைகளை பாத்திரம் கழுவ வைக்கும் அவலம், நல்லாசிரியர் விருது தேர்வில் நடக்கும் சூட்சமம் என விரிவடைகின்றன.உளவியல் பாதிப்பில் சிக்கும் மாணவர்கள், மதுவால் பாதிக்கும் படிப்பு, வட்டி தொழில் நடத்தும் ஆசிரியர்கள் என, கல்வித் துறையின் அவலங்களை சாடுகிறார் நுாலாசிரியர். மாணவர்கள், ஆசிரியர்கள் மனம், அவர்களுக்குள் ஊடுருவிய அழுக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.– டி.எஸ்.ராயன்