/ கதைகள் / அத்தை என்னும் ஆளுமை

₹ 120

மனோன்மணியம் சுந்தரனாரின் கொள்ளுப் பேரன் மோதிலால் மனைவி எழுதியுள்ள குறுங்கதைகளின் தொகுப்பு நுால். இதில் சுவாரசியம் தரும் 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. தொகுப்பில் உள்ள ‘அத்தை என்னும் ஆளுமை’ சிறுகதை, படிக்கத் துாண்டுகிறது. அதுவே புத்தகத் தலைப்பாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்காவை ஆளுமையாக அடையாளம் காட்டும் பெண்களிடையே, அத்தையை கொண்டாடும் கதாபாத்திரம் சிறப்பு தருகிறது. சமூகத்தில் மறைந்து வரும் கூட்டுக் குடும்ப உறவின் அவசியம் பற்றி சிறுகதைகளில் மையம் இழையோடுகிறது. தொழில் நுட்பங்களில் வாழும் இளைய தலைமுறையினர் படித்தறிய வேண்டும் என்பதற்காக, மென்மை குன்றாது எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். – -ஜி.வி.ஆர்.,


புதிய வீடியோ