/ சிறுவர்கள் பகுதி / அத்திரி பாச்சா கொழுக்கட்டை!

₹ 90

சிறுவர் – சிறுமியர் விரும்பும் சிரிப்பு சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையிலும் நீதி போதனை நச்சென்று கூறப்பட்டு உள்ளது. ஞாபக மறதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, ‘கொழுக்கட்டை’ கதை வெடி சிரிப்பையும் நல்ல பாடத்தையும் தருகிறது. ஆடு, புலி, புல்லுக்கட்டை மையமாக உள்ள கதை அறிவையும் சமயோசித புத்தியையும் வளர்க்க உதவுகிறது. ஆங்காங்கே கோட்டுச்சித்திரங்கள் தரப்பட்டுள்ளன. உண்மையான பணக்காரன் யார், பணத்தால் வருவதல்ல நிம்மதி என்ற கருத்தை புகட்டுவது நிதர்சனமான உண்மை. இந்த போதனைகள் பிஞ்சு நெஞ்சங்களில் பதிந்தால் பிற்கால வாழ்க்கை சிறக்கும். நீதி போதனையுடன் விடுகதைகள் போல் அமைந்துள்ள சிறுகதை புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி