/ கதைகள் / ஆத்துப் பாலம்
ஆத்துப் பாலம்
இளமை காலத்தில் வாழ்ந்த ஊர் குறித்தான நினைவுகளை வெளிப்படுத்தும் நாவல். இரண்டு பாகங்களாக கிராம வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது. இளமை பருவத்தில் வாழ்ந்த ஊர் நினைவு அழகானது. அதை சம்பவங்களுடன் இணைத்து, விபரங்களுடன் தெள்ளிய நீரோட்டம் போல் சுவையாக சொல்லி இருக்கிறது. கிராமத்து மண்ணும், மனிதர்களும், குணாதிசயங்களும் தனித்துவமாக உள்ளன. மனம் வெளிப்படுத்தும் அழகை அச்சு அசல் மாறாமல் கண்முன் நிறுத்துகிறது. ஆற்றையும், பாலக்கட்டையையும், மரங்களையும், வயல் காட்டையும், குருவிக் கூட்டையும் நுண்ணிய பார்வையோடு பதிவு செய்திருக்கிறது. ஞாபகச் சுவடுகளை நக்கலும் நையாண்டியுமாக கூறுகிறது. கிராம வாழ்வை உயிர்ப்பித்துள்ள நாவல். – ஊஞ்சல் பிரபு