/ கதைகள் / ஆட்களை விழுங்கும் ஆச்சரியமான ஆறு
ஆட்களை விழுங்கும் ஆச்சரியமான ஆறு
ஏடு தரும் செய்தியாக அமைந்த கற்பனை கலந்த நாவல். பேய், பூதம் எலும்புக் கூடு எழுந்து செயல்படுதல், கிராமம், ஊர் விட்டு நெடுந்தொலைவு பயணம், கிராம மக்கள் வரவேற்பு, வியப்பூட்டும் பச்சை மரகதக் கல் போன்ற தகவல்கள், நாவலை நகர்த்திச் செல்ல உறுதுணையாக உள்ளன.நாவலின் கரு, முனிவரிடம் இருந்த பச்சை மரகதக் கல்லை ஆறு விழுங்கிவிட்டது. முயன்று தேடியும் கிடைக்கவில்லை. முனிவர் சாபம் விட்டார். ஆற்றைக் கண்டுபிடித்து சாபத்தைப் போக்கி, பச்சை மரகதக் கல்லை மீட்டவருக்கு திருமணம் நடந்த நிகழ்வோடு முடிகிறது. கற்பனை கதை எழுதுவோருக்கு பெரிதும் உதவும். அறிவொளி விருது பெற்றுள்ளது.– பேராசிரியர் இரா.நாராயணன்